வட மாகாண முதலமைச்சருக்கு இன்று அகவை 75!

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு இன்று 75 ஆவது பிறந்த நாள். இவர் 1939 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி ஹல்ஸ்டொப்பில் பிறந்தார்.

cv-vickneswaran-cm

இவர் சிலோன் பல்கலைக்கழகம், சிலோன் சட்டக் கல்லூரி ஆகியவற்றில் பயின்று நீதிச் சேவையில் இணைந்தார். ஜனாதிபதி சட்டத்தரணியான இவர் உயர்நீதிமன்ற நீதியரசராக ஓய்வு பெற்றார். இதன் பின் அரசியலில் பிரவேசித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவரின் தகப்பன் யாழ்ப்பாணத்தில் மானிப்பாயை சேர்ந்தவர். இவரின் அப்பப்பா பொன். அருணாச்சலம், பொன். இராமநாதன் ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

இவர் ஆரம்ப கல்வியை குருணாகலில் கிரிஸ்ற்சேர்ச் கல்லூரியில் படித்தார். பின் அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலையிலும், கொழும்பு ரோயல் கல்லூரியிலும் பயின்றார்.