வட மாகாண சபை தவிசாளர் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்

வட மாகாண சபை தவிசாளர் சி.வி.கே சிவஞானம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டத் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக கடமையேற்றுக் கொண்டார்.

svk-sivaganam-at-kaithady

வட மாகாண சபையின் பேரவைச் செயலாளர் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி தவிசாளரினை அலுவலக வாயில் வைத்து சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஆவணத்தில் கையொப்பமிட்ட தவிசாளர் அலுவலக உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

உள்ளூராட்சி செயலாளர் திரு.ஆர். வரதீஸ்வரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.