வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களை கண்காணித்தல் பற்றிய கலந்துரையாடல்

alunar2அரசு அல்லாத நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசு நிறுவனங்கள் ஒவ்வொரு திட்டமும் கண்டிப்பாக அங்கீகாரம் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் ஜிஏ. சந்திரசிறி அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.

அதன்படி ஒவ்வொரு அரசு சாரா நிதி திட்டங்களும் ஒரு தகவல் முகாமைத்துவ முறைமை (MIS) மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.வட மாகாண மக்களிடம் திட்டங்களை செயற்படுத்தும் போது பயனாளிகளின் மீள் வருதலை இத்தகவல் முகாமைத்துவ முறைமை தவிர்க்கும் .மேலும் இவ் முறைமையானது மக்கள் உண்மையான தேவைகளை அறிய உதவும்.

அரசு சாரா நிதியுதவி திட்டங்களை கண்காணிக்க தகவல் முகாமைத்துவ முறைமை செய்யவது தொடர்பான தொழில்நுட்ப ஆதரவை பெறும் முகமாக யுஎன்ஓசிஎச்ஏ அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினார்.

இத்தகவல் முகாமைத்துவ முறைமை இணைய உதவியுடன் மாகாணத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும். இத்தகவல் மேலாண்மை திட்டத்திற்கு மாவட்ட செயலகங்களின் அலுவலர்கள் மூலம் தரவு பதிவேற்றப்படும்.

இக் கூட்டத்தில் பிரதிப்பிரதம செயலாளர் திட்டமிடல் ஆர்.உமாகாந்தன்,உதவி பணிப்பாளர் திட்டமிடல் எம்.துஷ்யந்தன் ,பணிப்பாளர் தகவல் வள முகாமைத்துவம் நிலையம் எஸ்.யோகராஜா மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.