வடமாகாண முதலமைச்சர் – மன்னார் ஆயர் சந்திப்பு

mannar-ayar-vickiவடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.

1385899868

மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காணிப் பிரச்சினைகள், இராணுவத்தினரின் தலையீடுகள், அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம், அமைச்சர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாடுகள், மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், மீள்குடியேற்ற கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகள் உட்பட மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்; முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிராய்வா, ஜீ.குணசீலன், அயூப் அஸ்மீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.