Ad Widget

வடமாகாண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரச சார்பற்ற நிறுவனங்கள் முனவர வேண்டும்

யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் இணையத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் சொர்ணாம்பிகை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் எதிர்கால முன்நோக்கிய நகர்வு எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் ரி.தற்பரனினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

அதன்பின்னர், அரசசார்பற்ற நிறுவனங்களின் முன்னைய தலைவர்கள், வடமாகாண முதலமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினராக, அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் தேவானந் கலந்து கொண்டார்.

வடமாகாணத்தின் அரசார்பற்ற நிறுவனங்களின் தற்போதைய நிலைமைகள், வடமாகாணத்திற்கு பங்களிப்புகள் செய்யும் நிறுவனங்கள் மற்றும் மீள் குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகள் செய்யும் நிறுவனங்கள் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

வடமாகாணத்தில் மக்களுக்கான வினைத்திறனை எற்படுத்துவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசார்பற்ற நிறுவனங்கள் முன்வரும் போது மக்களின் தேவைகள் மற்றும் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts