வடமாகாண சபையால் கதிரைகள் கையளிப்பு

2014 ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து ஏழாலை மேற்கு ஐக்கியநாணய சங்கத்துக்கு 90,000 ரூபா பெறுமதியான 112 கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

donate-chair

சங்கத்தின் தலைவர் மகாதேவன் தலைமயில் நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனால் குறித்த கதிரைகள் கையளிக்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் க.அருந்தவநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.