வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி (NCDB) ஆரம்பிக்க ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் இது தொடர்பான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் தற்போது பெறப்பட்டு வருவதுடன் மிகவிரைவில் இவ்வங்கியினை உத்தியோகபூர்வமாக வடமாகாணத்தில் நிறுவுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த வங்கியினூடாக வட மாகாணத்தில் வாழும் சுமார் 1.3 மில்லியன் மக்களும் பயனடைய வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.