வடமாகாண அபிவிருத்திக்கென இவ்வருடத்தில் மட்டும் 1.385 பில்லியன் ஒதுக்கீடு!

வடமாகாண அபிவிருத்திக்கென இவ்வருடத்தில் மட்டும் 1.385 பில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாகாண அபிவிருத்திக்காக அடுத்த வருடத்தில் 6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

alunar-chanthera-sri--1

கடந்த 09 ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற வாகன கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர்களுக்கு 16 மில்லியன் பெறுமதியான வாகனங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கென 1.385 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள போதும் இதுவரையில் 380 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது, எனவே இந்த தொகையை உரிய விதத்தில் அபிவிருத்திக்காக செலவிடுமாறு மாகாணசபை செயலாளரிடம் ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.

வடமாகாண சபையின் பிரதம செயலாளர் ஆர்.விஜயலக்ஷ்மி , ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.