வடமாகாணசபை அவைத்தலைவராக சீ.வி.கே சிவஞானம் நியமனம்

c-v-k-sivaganamவடமாகாணசபை அவைத்தலைவராக சீ.வி.கே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்டக்கிளைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளருமாவார். பிரதி அவைத்தலைவராக முல்லைத்தீவு உறுப்பினர் அன்ரனி நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று(9) இரவு நடைபெற்ற கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தின் சந்திப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று முன்தினமே அமைச்சர்கள் தெரிவு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை தெரிந்ததே. வட மாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை(11) வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்கவுள்ளனர்

தொடர்பு பட்ட செய்தி

வெளியாகியது வடக்கு மாகாண அமைச்சர்கள் விபரம் முடிவுக்கு வந்தது இழுபறி!