வடமராட்சி நபர் ரி.ஐ.டியினால் கைது!

arrest_1பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் வடமராட்சி கருணவாய் வடக்கைச் சேர்ந்த துரைராஜா ஜெயக்குமார் என்பவர் வியாழக்கிழமை (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம், முசிலம்பிட்டி இந்தியவீட்டுத் திட்டப்பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறித்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி நபர் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts