வடபகுதியில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மீள்குடியேற்றம் – அபிவிருத்திக்காக பல மில்லியன் !!

வடபகுதியில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சம்பந்தமான ஜனாதிபதியின் துரித நடவடிக்கைக் குழுவின் அறிக்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, சுகாதாரத் துறையில் 2135 மில்லியன் ரூபாவும், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 9254 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சேதமடைந்த பாடசாலைக் கட்டடங்களை புனரமைப்பதில் 1341 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

அதேவேளை, வடபகுதி மக்களுக்கென 78 ஆயிரம் நிரந்தர கட்டடங்களும் நிர்மாணிக்கப்படுகின்றன.

வீதிகள், நீர் விநியோகம், விவசாயம் ஆகிய துறைகளும் அபிவிருத்தி செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor