வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு!– தயா மாஸ்டர்

thaya-masterவடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலை இலக்கு வைத்து சில வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் செயற்படத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பில் உயர் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

தமிழ் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த இருவர் இவ்வாறு வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.குறித்த அரசியல் கட்சி வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரின் தேவைக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகின்றது என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.