வடக்கு தேர்தலுக்கு முன் முஸ்லிம்,சிங்கள மக்களை குடியேற்றவும்: ரிசாத்

வடக்கில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றவேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களில் 20 சதவீதமானோர் மட்டுமே தமது சொந்த இடங்களில் தற்போது மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர்.

வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அங்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படவேண்டும்.

இயன்றளவு விரைவில் வடமாகாண சபை நிறுவப்படல் வேண்டும் என அமெரிக்காவும் இந்தியாவும் கூறியிருந்தன. அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கில் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரியிருக்கின்றது என்றார்.