தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரளவேணடும். போர் முடிவுக்கு கொணடுவரப்பட்டாலும் வடக்கு, தெற்கு சமூகங்களிடையே சுமுக நிலை உருவாக்கப்படுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கின்றன. -இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் இன்று காலை 9.30க்கு ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 30 வருடகாலமாக தொடர்ந்த போர் முன்னாள் ஜனாதிபதி, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் உறுதியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, சமாதானம் நிலைநாட்டப்பட்டது.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், வடக்கு தெற்கு மக்களிடையே ஒரு சுமுகமான உறவு ஏற்படுத்தப்படவில்லை. அந்த இடைவெளி ஈடுசெய்யப்படாமலே உள்ளது. எனவே வடக்கு தெற்கு மக்களின் இயல்பு வாழ்வுக்கு ஏற்றதான சுமுக நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.-என்றார்.