வடக்கு கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்

caution-echcharekkaiமன்னார் கடல் வழியாக உருவாகும் தாழமுக்கம், முல்லைத்தீவு கடல் வழியாக காங்கேசன்துறையை கடக்கவுள்ளமையால் வடக்கு கரையோரத்தைச்சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மழையுடன் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசவிருப்பதினால், கடலோர பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.