ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக இலங்கை அரசாங்கம் மீண்டும் நியமித்தமையை வரவேற்றுள்ள கனடா, வடக்கின் புதிய ஆளுநராக இராணுவப் பின்னணி இல்லாத சிவிலியன் ஒருவரை நியமித்தமையையும் வரவேற்றுள்ளது.
இவை தொடர்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை மக்கள் வழங்கிய ஆணையை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய வகையில் செயற்படுத்துவார் என தான் நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கப்பாட்டை உண்மையானதாக ஏற்படுத்துதல் என்பவை தொடர்பில் கனடா தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.