வடக்கில் 6,519,761 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கில் இதுவரை 6, 519, 761 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக ஹலோறஸ்ட் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்தது.

2002 தொடக்கம் 2012 வரையான பத்து ஆண்டு காலத்தில் இந்த சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின்போது இரண்டு தரப்பினராலும் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள், கண்ணிவெடிளை மீட்கும் பணியில் ஹலோறஸ்ட் நிறுவனம் 2002 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றது.

வடக்கில் இது வரை 6, 519, 761 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் காணப்பட்ட வெடிகள் மற்றும் வெடிக்காத வெடி பொருட்கள் என்பன ஹலோறஸ்ட் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor