வடக்கில் வீடு, காணி கையளிப்பு இடைநிறுத்தம்

pasil-rajapakshaதேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இந்த அறிவிப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், எதிர்வரும் 21ஆம் திகதி வரை வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகளையோ காணிகளையோ வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பசில் குறிப்பிட்டார்.