வடக்கின் பெரும்போர் நாளை ஆரம்பம்

Cricket-Logoவடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் கிறிக்கெட் போட்டி இம்மாதம் 07ஆம் 08ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனாலும் 107ஆவது வடக்கின் பெரும்போர் யாழ்ப்பாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இம்மாதம் 14ஆம் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 16ஆம் திகதி நடைபெற இருந்த 11ஆவது மட்டுப்படுத்தப்பட்ட 50 பந்து பரிமாற்ற போட்டி எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதே வேளை தற்ப்பொழுது நடந்து வரும் இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டியின் நேற்யநாள் முடிவின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்து 195 ஒட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய யாழ் இந்து கல்லூரி ஆட்ட நேர முடிவில் 7 இலக்கு இழப்பிற்கு 119 ஒட்ங்களை பெற்றுள்ளனர் ஆட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.