வடக்கின் சுகாதார அபிவிருத்திக்கு 36.5 கோடி

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு 36.5 கோடி ரூபாவை உலக வங்கி வழங்கியுள்ளது என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டுக்கான சுகாதார அபிவிருத்தித் திட்டத்துக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts