லொறி – பஸ் விபத்தில் மூவர் காயம்!

பளைப் பகுதியில் – ஏ9 வீதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தனர்.

பளை வைத்தியசாலைக்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் லொறியும் மோதிக் கொண்டதில் இந்த விபத்தில் இடம்பெற்றது.

இதில் லொறிச் சாரதியும் அதில் பயணம் செய்த இருவரும் காயமடைந்தனர். புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர்களான இரத்தினசிங்கம் கருணாகரன் (வயது 40), கதிரவேலு அபிசன் (வயது 28) ஆகியோரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

மற்றும் ஒருவர் சிறுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.