ரயிலில் பயணித்த மாணவன் வைத்தியசாலையில்

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வெளியில் எட்டிப் பார்த்தபோது, மின்கம்பத்துடன் முகம் அடிபட்டதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தாரக டுலாஜ் எனற மாணவனே படுகாயமடைந்தார்.
காங்கேசன்துறை தல்சேவன விருந்தினர் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, நண்பர்களுடன் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்