Ad Widget

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை அஞ்சலிக்கும் உரிமையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்!

கடந்தகால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்ததும் உரிமை அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அதற்கென ஒரு பொதுவான தினத்தைப் பிரகடனப்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

கடந்த கால யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அவர்களது அனைத்து உறவுகளுக்கும் இருக்க வேண்டும்.

இதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என்ற நிலை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதேநேரம், உயிரிழந்த உறவுகளுக்கான சமய அனுஸ்டானங்களை மேற்கொள்ள வசதியாக வடக்கின் ஓமந்தைப் பகுதியில் ஒரு பொதுவான இடத்தில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

ஒரு பொது தினத்தை இறந்த உறவுகளின் நினைவு நாளாகப் பிரகடனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இவ் விடயங்களை தான் நாடாளுமன்றிலும் வலியுறுத்தி தனி நபர் பிரேரணை கொண்டு வந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts