யாழ். முகாமையாளர் சம்மேளனக் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் முகாமையாளர் சம்மேளனத்தின் 100ஆவது கலந்துரையாடல் நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.ஆரம்பத்தில் வங்கித்துறையினரைக் கொண்டு நடத்தப்பட்ட முகாமையாளர் சம்மேளனக் கலந்துரையாடல் பின்னர் படிப்படியாக பொறியியலாளர்கள், மருத்துவர்ககளையும் உள்வாங்கியுள்ளது. முகாமையாளர் சம்மேளனம் அரசியலாளர்களையும் அரசியல் விடயங்களையும் உள்வாங்கவுள்ளதாக இந்தக் கலந்துரையடலில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் சிறிய முதலீடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், பெறுமதி வாய்ந்த முதலீடுகளிலும் யாழ்ப்பாண முகாமையாளர் சமூகம் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இதன்போது கூறப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் நடைபெற்ற விளக்கவுரைகளில் ‘உங்கள் வெற்றி உங்கள் சிந்தனையில்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து வருகைதந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனும், ‘தண்ணீரினால் ஏற்படும் நோய்கள்’ என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.சிவகணேசன் மற்றும் டாக்டர் ஆர்.சுரேந்திரகுமார் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.