யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்.மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்புரை நிகழ்த்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகிகோர் கூட்டத்துக்கு இணைத்தலைமை தாங்கினார்கள்.

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிறீதரன் மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் கவ்வி, போக்குவரத்து, சுகாதாரம், மின் விநியோகம், நீர் விநியோகம்,மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.