யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கணேகம நியமனம்

policeயாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக டப்ளியூ.ஏ.டி.பி.கணேகம நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய இந்து கருணாரட்ணவுக்கு இன்று திங்கட்கிழமை முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.ஏ.டி.பி.கணேகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய இந்து கருணாரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.