யாழ். மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகம் திறந்துவைப்பு

Transportation Commissionபோக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகமொன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தினால் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில், நாக விகாரை விமல தேரர், பாலகதிர்காம தேவஸ்தான சிவஸ்ரீ குமாரக்குருக்கள், மௌலவி ஜே.ஏ.எம். அப்துல் அஸீஸ், அருட்தந்தை விஜின்றஸ், தேசிய ஆணைக்குழுவின் பொறியியலாளர் நிரஞ்சலி பெரேரா, தேசிய ஆணைக்குழுவின் வட மாகாண மாவட்ட அலுவலர் இராஜ இரணவீர கபரகம, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிறைவேற்று உத்தியோகத்தர் ஆலோக்கா கருணாரத்தின, யாழ். மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ச.குகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.