யாழ். மாவட்டதிற்கு இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது.

மாவட்டங்களில் பதிவாகும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மாவட்ட இட ஒதுக்கீடு தொடர்பான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இலங்கையின் புதிய வாக்காளர்கள் 172,000 பேர் கடந்த ஆண்டு இணைக்கப்பட்ட நிலையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,400,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor