103 பவுண் நகை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் மற்றுமொரு சந்தேகநபரும் ஆட் பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அண்மையில், கொக்குவில் பகுதி வீடொன்றில் 103 பவுண் நகை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட மூவர் கேப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மேற்படி, வழக்கினை இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார், 25 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று ஆட் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் கடவுச்சீட்டினை மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன் ஒவ்வொரு வாரமும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டுள்ளார். ஏனைய இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்தி
விஜயகாந் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வரை ஒத்திவைப்பு!