யாழ் மட்டுவில் பகுதியில் வீதி விபத்து தலை நசுங்கி பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணம் மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகாமையால் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர்  தலை நசுங்கி பலியாகியுள்ள   சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பெண் தனது கணவன் பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் தென்மராட்சி நோக்கி பயணம் செய்துள்ளார்.இவ் நிலையில் பின்னால் வந்த கன்ரர் வாகனம் விலத்த முற்பட்ட வேளையில் அதற்கு வழிவிட மோட்டார் சைக்கிள் பாதையோரம் ஒதுங்கிய போது இந்த விபத்து இடம்பெற்றது.

இவ் வேளையில் மோட்டார் சைக்கிளிலில் பின்னால் இருந்த குறிப்பிட்ட பெண் நிலத்தில் வீழ்ந்த போது கன்ரர் வாகனத்தின் ரயர்கள் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார்.