யாழ். போதனா வைத்தியசாலை பல் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பில்

Jaffna Teaching Hospitalயாழ். போதனா வைத்தியசாலையின் பல் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பல் வைத்திய வெளிநோயாளர் பரிவில் கடமையாற்றி வந்த சிற்றூழியர் ஒருவரை வேறு பிரிவுக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது பிரிவுக்கு சிற்றூழியர் பற்றாக்குறை காணப்படும் நிலையிலும் ஒருவர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பல் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வழமைபோன்று இன்று இயங்கவில்லை.

சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் பலரும் திரும்பிச் செல்லும் நிலை காணப்படினும் அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ். போதனா வைத்திசாலையின் பல் சிகிச்சைப் பிரிவில் பத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் சேவையாற்றுகின்ற நிலையில் இன்று மூவரை மட்டுமே வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் காணக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் பல் சிகிச்சைப் பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்றப்பட்ட சிற்றூழியரை மீண்டும் அப்பிரிவுக்கு மாற்றுமாறு கோரி நோயார்கள் சிலர் வைத்தியசாலையின் பணிப்பாளரை சந்திக அனுமதி கேட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் நூறிற்கும் மேற்பட்ட சிற்றூழியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.