யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார சிற்றூழியர்கள் புறக்கணிப்பில்

ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் கனிஷ்ட சுகாதார சிற்றூழியர்கள் இன்று ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

jaffna-hospitla

இவர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார சிற்றூழியர்கள் இன்று காலை 7மணி தொடக்கம் 12 மணி வரை இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது இவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகளாக,

2006ஆம் ஆண்டு சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்துமாறும்,சகல தற்காலிக மற்றும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்குமாறும்,08மணித்தியால காலவரையறைக்கு மேலதிகப் பெற்றுக் கொள்ளப்படும் கடமைக்கான உரிய மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறும்,சீருடைக் கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்குமாறும்,05நாட்களைக் கொண்ட வேலை வாரத்தை செயற்படுத்துமாறும் மேலும் வாராந்த விடுமுறை நாள் ஒழிப்பை உடனடியாக நிறுத்துமாறும்,அபாயக் கொடுப்பனவை அதிகரிக்குமாறும்,பரிசாரகர்களுக்காக ஒரு வருட காலப்பயிற்சியை வழங்குமாறும் ,முறையற்ற பதில் கடமை நியமனங்கள் வழங்குவதை உடனடியர்க கைவிடுமாறும் என்ற ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் யாழ் ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்க பிராந்திய செயலாளர். ஜெயரூபன் கருத்து தெரிவிக்கையில்,

தாம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே 5மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றோம்.இந்த பணிப்புறக்கணிப்பு இன்று 12மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்படும்.ஆயினும் இந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் தமது போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் தெரிவித்தார்.