கடந்த வருடம் யாழ். போதனா வைத்தியசாலையில் 2 இலட்சத்து 93 ஆயிரத்து 744 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் குடாநாட்டின் அபிவிருத்தி தொடர்பாக மாவட்டத்தின் அபிவிருத்தி புள்ளிவிபரங்களை தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கமைய வெளிநோயாளர் பிரிவில் 2009ஆம் ஆண்டு 2 இலட்சத்து 39ஆயிரத்து 677பேரும் 2010ஆம் ஆண்டு 2 இலட்சத்து 68ஆயிரத்து 922 பேரும் 2011ஆம் ஆண்டு இரண்டு இலட்சத்து 82 ஆயிரத்து 946 பேரும் 2012ஆம் ஆண்டு 2 இலட்சத்து 93 ஆயிரத்து 744 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதேபோல் 2009ஆம் ஆண்டு 92 ஆயிரத்து 546 பேரும் 2010ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 842 பேரும் 2012ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 23ஆயிரத்து 604 பேரும் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிகிச்சை நிலைய வரைவுகளாக 2009ஆம் ஆண்டு 4 இலட்சத்து 56 ஆயிரத்து 934 பேரும் 2010ஆம் ஆண்டு 4 இலட்சத்து 76 ஆயிரத்து 616 பேரும் 2011ஆம் ஆண்டு 5 இலட்சத்து 31 ஆயிரத்து 350 பேரும் 2012ஆம் ஆண்டு 6 இலட்சத்து 37 ஆயிரத்து 361 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மகப்பேறுகள் 2009 ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 358, 2010 ஆம் ஆண்டு 6 ஆயிரத்து 969, 2011ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 69, 2012ஆம் ஆண்டு 6ஆயிரத்து 888 பேருக்கு நடைபெற்றுள்ளன.
பெரியளவிலான சத்திர சிகிச்சைகள் 2009 ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 358 பேருக்கும் 2010 ஆம் ஆண்டு 6 ஆயிரத்து 762 பேருக்கும் 2011ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 727 பேருக்கும் 2012ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 642 பேருக்கும் நடைபெற்றுள்ளன.
சிறிய அளவிலான சத்திரசிகிச்சைகள் 2009 ஆம் ஆண்டு 20 ஆயிரத்து 251 பேருக்கும் 2010 ஆம் ஆண்டு 22 ஆயிரத்து 860 பேருக்கும் 2011ஆம் ஆண்டு 26 ஆயிரத்து 555 பேருக்கும் 2012 ஆம் ஆண்டு 26 ஆயிரத்து 809 பேருக்கும் நடைபெற்றுள்ளன.
சிசேரியன் பிரிவில் 2009 ஆம் ஆண்டு ஆயிரத்து 711 பேருக்கும் 2010 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 45 பேருக்கும் 2011ஆம் ஆண்டு 2ஆயிரத்து 83 பேருக்கும் 2012ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 128 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.