யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இங்கிலாந்து வைத்தியர் சங்கமும் அவுஸ்ரேலிய மெரியச் சங்கமும் உபகரணங்கள் அன்பளிப்பு

Jaffna Teaching Hospitalயாழ்.போதனா வைத்தியசாலையின் கண்ணியல் நோய்ப் பிரிவுக்கு அண்மையில் நூறு வில்லைகளும், அதனோடு தொடர்புடைய உபகரணங்களும் இங்கிலாந்து வைத்தியர் சங்கத்தினாலும், அவுஸ்ரேலிய மெரியச் சங்கத்தினாலும் அன்பளிப்பு செய்யப்ட்டுள்ளது.

கண் வைத்தியர் மலரவனின் முயற்சியாலும், யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தின் முயற்சியாலும் கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் கிடைக்கப் பெற்றதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சிறி பவானந்தராஜா தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறான உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் எனக்குறிப்பிட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் இதனால் யாழ் மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் யு.என்.ஐ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் வடமாகாண மக்கள் நன்மையைப் பெற்றுக்கொளள் முடியும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சிறி பவானந்தராஜா மேலும் தெரிவித்தார்.