512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதில்23 ஆவது கஜபா படைப் பிரிவிலிருந்து 150 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர்.
இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாக 512 ஆவது படைப்பிரிவின் கேர்ணல்,அஜித் பல்லாவல தெரிவித்திருந்தார்.