யாழ் பொலிஸாரின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு

meeting_jaffna_police_jeffreeyயாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்துள்ள கருத்துக்கள்

காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு பொலிஸார் வலைவீச்சு
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நாலரை இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி சம்பந்தமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வர்த்தக நிலையத்தைச் சோந்த ஒருவர் இந்த மோசடியை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதுடன் வர்த்தக நிலையத்தையும் கைவிட்டுள்ளார் எனவம் பொலிஸார் குறிப்பிட்ட சந்தேகநபரை தேடி வருவதாகவும் தெவித்துள்ளார்.

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 656பேர் கைது

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 656 பேரில் 30 பேருக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்; மிகுதி பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டதாகவும், யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

அந்த வகையில், யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மதுபோதையில் கலகம் விளைவித்தவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், வாகனங்களை பரிசோதித்த போது அவை உரிய முறையில் இல்லாமை, மற்றும் வாகனங்களை உரிய ஆவணங்கள் இன்றி செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் 656 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில், யாழ் பொலிஸ் பிரிவில், மது விற்பனை செய்த 3 பேரும், போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த 10 பேரும், வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 79 பேரும் வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 29 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியில், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் மற்றும் பொது இடத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் இருவரும், போக்குவரத்து விதி முறைகளை மீறிய 10 பேரும், வாகன பரிசோதனையில் 33 பேரும், வாகனங்களின் உரிய முறையில் இல்லாமை 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் குடிபோதையில் கலகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 4 பேரும், சந்தேகத்தின் பேரில் ஒருவரும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த இருவரும், வாகனங்களின் ஆவணங்கள் இல்லாதவர்கள் 24 பேரும், வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 37 பேரும் கைதாகியுள்ளனர்.

கோப்பாய் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக 12 வழக்குகளும், வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 96 பேரும், வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 64 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 32 பேரும், வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 18, சாவகச்சேரி வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 29 பேரும், வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 26 பேரும் கைதாகினர்.

வட்டுக் கோட்டையில் வாகனங்களின் ஆவணங்கள் இல்லாத நபர்கள் 45 பேரும், வாகனங்கள் உரிய முறையில் இல்லாமை 38 பேரும், போக்குவரத்து விதிமுறைகளை மிறிய 10 பேருமாக 656 கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பி ஓடியவர்களில் இருவர் மீட்பு

கைதடி சிறுவர் இல்லத்தில் இருந்து 3 மூவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி. எம். ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையம் ஒன்றில் தாய் தந்தையரை இழந்த சிறுமி உட்பட இரு யுவதிகள் கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த இல்லத்தினை விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.

மேற்படி, நபர்கள் தொடர்பாக பாதுகாப்பு நிலையத்தினர் தேயடிதுடன், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை, இல்லத்தினை விட்டு வெளியேறிய மூவரில் ஒரு சிறுமியும், ஒரு யுவதியும் முல்லைத்தீவு நன்னடத்தை உத்தியோகத்தர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாருக்கும், கைதடி சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 15 வயது சிறுமியும், 21 வயது யுவதியும், சாவகச்சேரி பொலிஸாரினால் யாழ். சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, மீண்டும் சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும், மற்றைய யுவதி தொடர்பான தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.