யாழ். பேரூந்து நிலையத்தில் தென்பகுதி யுவதிகள் மூவர் கைது

arrest_1யாழ்பபாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் விபச்சார நடவடிக்கைகளுக்காக காத்திருந்த மூன்று தொன்பகுதி யுவதிகளைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் உள்ள பழக்கடை ஒன்றில் விபச்சாரத்திற்காக ஆண்களை தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில் குறித்த யுவதிகள் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தென்பகுதி கிராமம் ஒன்றிலிருந்து யாழ். வந்துள்ள இவர்கள் நாவற்குழிப் பகுதியில் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்தாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும்.

குறித்த பெண்களை விபச்சாரத்திற்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யுவதிகள் 19, 23, 32 வயதை உடையவர்கள் எனவும் இவர்கள் பற்றிய விபரத்தை வெளியிட முடியாது எனக் குறிப்பிட்ட பொலிஸார் விசாரணையின் பின்னர் இவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor