யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக கே.ஜி.எல்.பெரகரா நியமனம்

யாழ். பிராந்திய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஜி.எல்.பெரகரா இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.இதன்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் அவருக்கு விசேட பொலிஸ் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.அத்துடன் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக ஸ்ரீ குணநேசன் பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரும் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றுள்ளார் என யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.