யாழ். பல்கலை மாணவியர் மூவர் விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.வெள்ளிக்கிழமை (இன்று), இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும் பேராசிரியருமான புஷ்பரட்ணம் தெரிவித்தார்.

இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவிகள் விடுதியின் சங்கத் தலைவி என்றும் ஏனைய இருவரும் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இவர்களில் இருவரை மாத்திரமே நாளைய தினம் விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிவித்ததான பேராசிரியர் புஷ்பரட்ணம் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor