இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிவய வருவதாவது,
இன்று மாலை வேளையில் நுண்கலை வளாகத்தில் நின்று கொண்டிருந்த நுண்கலைப்பீட மாணவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 15 பேர் கொண்ட இனம் தெரியாத கும்பல் ஒன்று பல்கலை காவலாளியை தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளது.
தாக்குதல் சம்பவத்தின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான மாணவர் ஒருவர் தற்போது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இன்று காலை குறித்த பீடத்தில் 1ம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இதன் காரணமாகவே நுண்கலை மாணவர்கள் நிகழ்ச்சி ஒழுங்குகளை நிறைவு செய்யும் பொருட்டு பல்கலை வளாகத்தில் நின்றுகொண்டிருந்ததாகவும் அப்போதே இனம்தெரியாத கும்பல் தன் கைவரிசையைக் காட்டிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை தற்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.