யாழ்.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை செய்யும் அறைக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளனர்.
இன்று அதிகாலையிலேயே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முஸ்லிம் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த கழிவு ஒயில் வீச்சு தாக்குதல் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் மற்றும் தேர்தல் காலங்களிலும் படைப்புலனாய்வாளர்கள் கழிவு ஒயில் வீச்சு நடத்தப்பட்டிருந்தது.
அதேபாணியிலேயே தற்போது யாழ்.பல்கலையில் உள்ள முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.