யாழ். பல்கலையில் 2 புதிய பீடாதிபதிகள் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலை பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பீ.சிவநாதனும் விவசாய பீட பீடாதிபதியாக பேராசிரியர் மிகுந்தனும் புதன்கிழமை(6) பதவியேற்றுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பீடாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் போட்டி எதுவுமின்றி பொருளியல் துறை பேராசிரியரான சிவநாதன் பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலையின் கலை பீட பீடாதிபதியாக பேராசிரியர் என்.ஞானக்குமரனும் விவசாய பீட பீடாதிபதியாக சிவமதி சிவச்சந்திரனும் முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts