யாழ். பல்கலையில் மாணவர் குழுக்களிடையே மோதல்: அறுவர் கைது

jaffna-universityயாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்று வரும் தென்னிலங்கை மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் இம்மோதல் சம்பவம் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையிலேயே இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களின் ஆறு பேர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.