யாழ் பல்கலைச் சூழலில் இருந்து பொலிசார் அகன்றிருப்பதை இன்று காணக்கூடியதாக இருந்தது.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களைத்தொடரந்து கடந்த ஒருமாத காலமாக தற்காலிக கூடாரம் அமைத்து பல்கலைக்கழக வாயிலில் பிரசன்னமாயிருந்த பொலிசார் இன்று காணப்படவில்லை. கூடாரங்கள் வெறுமையாக காட்சியளிக்கின்றன.
இவ்வெளியேற்றம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என தெரியவில்லை.கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படும் மாணவர்கள் விடுதலை தொடர்பில் இறுக்கமான நிலமை தொடருகின்ற இந்நிலையில் ,தொடரும் வகுப்புப்புறக்கணிப்பு தொடர்பாகவும் பல்கலைக்கழகத்தினை பழைய நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் அடுத்தகட்ட நகர்வுகளை ஆய்வதற்கான கூட்டம் இன்று நடைபெற எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் அகன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.