யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை விடுதலை: ஜனாதிபதி

mahinda_rajapaksaதடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை புதன்கிழமை விடுதலை செய்யப்படுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுக்ககூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெற்றோரின் வேண்டுகோளிற்கினங்கவே இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தான் மாணவர்களுக்கு எதிரி இல்லை என்றும் எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் செயற்படாத வகையில் தங்களுடைய பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.

குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor