யாழ் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாள்
வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டது.

jaffna-uni-thai-pongal

இன்று காலை பல்கலைக்கழக பிரதான வாயிலில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி வெடிகள் கொழுத்தி கொண்டாடினர்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்நிகழ்வு யாழ் . பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை வடமாகாண சபையின் கன்னிப் பொங்கல் நிகழ்வு இன்று காலை சபைத் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண சபை உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.