யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர்வடிகட்டியை எதிர்வரும் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பணப் பல்கலைக்கழக ஆண் மாணர்கள் விடுதியில் போதிய நீர் வடிகட்டிகள் இன்மையால் குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் ஜனாதிபதிக்கும் கடந்த மாதம் எழுத்துமூலம் கோரிக்கையை விடுத்தனர்.
இந்நிலையில் மாணவர்களின் குடிதண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்பிரகாரம் மாணவர் வளாகத்தில் ஒரு பெரிய நீர்வடிகட்டியை அமைக்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்தது.
அந்த நீர்வடிகட்டியை இருவாரத்தினுள் உடனடியாக அமைக்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர் அதனை ஜனாதிபதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்படுகிறது.