Ad Widget

பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழலில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நூலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடிய சுமார் பல நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவுகள் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு  ஒருங்கிணைப்பு குழுவினரால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

arpaddam-5

arpaddam-4

arpaddam-3

arpaddam-2

arpaddam-1

Related Posts