யாழ். நகரப்பகுதியில் இரு நாட்கள் குடிநீர் தடை

save- waterயாழ். கோண்டாவில் பிரதான நீர் விநியோக குழாயில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், நேற்று மாலையில் இருந்து இன்றும் குடிநீர் விநியோகம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் நீர் வேலைப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் குருநகர், கொழும்புத்துறை, யாழ். நகரப்பகுதி, நாவாந்துறை, மடத்தடி உட்பட பல்ண்வுறு பகுதிகளில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை நீர் வேலைப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.