யாழ். கொழும் பஸ்ஸில் பயணித்த பெண்ணின் 25 பவுண் நகை மாயம்

Gold-nagai-juwaleயாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 30 ஆம் திகதி கொழும்பு சென்ற தனியார் பயணிகள் சொகுசு பஸ்ஸில் வந்த பெண்ணொருவரின் கைப்பையிலிருந்த 25பவுண் நகை காணாமால் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பெண் சம்பவதினம் இரவு எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளையயேற்றம் பகுதியிலிருந்து பஸ்ஸில் ஏறி கொழும்பு வந்துள்ளார்.

பஸ்ஸில் இவர் ஆசனத்துக்கு அருகில் கிளிநொச்சியிலிருந்து யுவதி ஒருவர் ஏறி அமர்ந்து வந்துள்ளார். ஓமந்தையில் இராணுவ சோதனை நிலையத்தில் இந்தப் பெண் இறங்கி பின்னர் பஸ்ஸில் ஏறியுள்ளார். இதன்போது கைப்பையை அவர் பார்த்த போது நகை பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்ட சிறிய பெட்டி கைப்பையின் அடியில் இருந்துள்ளது.

இடையில் எந்த இடத்திலும் இவர் பஸ்ஸிலிருந்து இறங்கவில்லை. பஸ்ஸில் குறிப்பிட்ட நேரம் கண்ணயர்ந்துள்ளார். கண் விழித்தபோது கைப்பை தோளில் தான் கொழுவியது போல் இருந்துள்ளது.

கொழும்பு வெள்ளவத்தையில் வந்திறங்கி வீடு செல்வதற்காக மருமகனின் காரில் ஏறி கைப்பையைத் திறந்து பார்த்த போது அதற்குள்ளிருந்த 25 பவுண் நகைப் பெட்டி காணாமல் போயுள்ளது தெரியவந்தது.

உடனடியாகச் சென்று அந்த பஸ் சாரதி, நடத்துனரிடம் விசாரித்து பஸ்ஸினுள் தேடிப் பார்த்தபோதும் எதுவும் கிடைக்கவில்லை. பஸ் உரிமையாளருக்கு முறையிடப்பட்டதுடன் பின்னர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

கைப்பையை தான் இறுக அனைத்து வைத்திருந்ததாகவும் அது வெட்டப்பட்டோ அல்லது சேதமக்கப்பட்டோ இருக்கவில்லை எனவும் நகையை பறிகொடுத்த பெண் தெரிவித்ததுடன் நகையை யாராவது தவறுதலாக எடுத்திருந்தால் 0775533092 என்ற தனது கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்றைய தினம் தன்னுடன் பயணித்தவர்களிடம் வேண்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor